clock

Sunday, January 31, 2010

தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance





விண்டோஸ் இயங்கு தளத்தின் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள வேறொரு கணினியை அணுகும் வசதியைத் தரும் Remote Assistance மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் கணினியில் ஏதும் சிக்கல் ஏற்படும் போது நீங்கள் அறிந்த ஒரு கணினி வல்லுனரின் உதவியை அவரிடம் நேரில் செல்லாமலேயே பெற்று சிக்கலைத் தீர்த்துக் கொள்ளலாம்.
அதாவது கொழும்பிலோ குருனாகாலிலோ வசிக்கும் நீங்கள் வெளிநாடொன்றில் இருக்கும் ஒரு நண்பரை அழைத்து அவர் அங்கிருந்தே உங்கள் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்த்து வைக்கும் வசதியை Remote Assistance தருகிறது.
இந்த வசதியைப் பெற உங்கள் கணினியிலும் இணைய விரும்பும் கணினியிலும் இணைய இணைப்புடன் விண்டோஸ் எக்ஸ்பியும் (விஸ்டாவிலும் மேம்படுத்தப்பட்ட ரீமோட் எஸிஸ்டன்ஸ் வசதி கிடைக்கிறது) நிறுவியிருத்தல் வேண்டும். அத்துடன் வின்டோஸ் லைவ் மெஸ்ஸெஞ்சரில் இணைவத்ற்கான ஒரு மின்னஞ்சல் முகவரியும் அவசியம்.
நீங்கள் நண்பரை அழைத்ததும் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டு கணினியுடன் இணைப்பை ஏற்படுத்தியதும் உங்கள் கணினியின் டெஸ்க் டொப் திரையை அவரது கணினியில் காண முடியும். அவருக்கு உங்கள் கணினியை முழுமையாகக் கட்டுப்படுத்த அனுமதி வழங்கப்படின் அவரது கீபோர்டையும் மவுஸையும் உபயோகித்து உங்கள் கணினியை முழுமையாக அவரது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வர முடியும். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.
முதலில் ஸ்டார்ட் மெனுவில் Help and Support தெரிவு செய்யுங்கள். உதவி வேண்டுபவர் மட்டுமே இதனைத் தெரிவு செய்ய வேண்டும். அப்போது Help and Support விண்டோ தோன்றும். அங்கு Ask For Assistance மெனுவின் கீழ் உள்ள Invite a Friend to connect to your computer with Remote Assistance என்பதைத் தெரிவு செய்யுங்கள். அடுத்து தோன்றும் விண்டோவில் Invite someone to help you எனும் லிங்கில் க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து தோன்றும் விண்டோவில் விண்டோஸ் மெஸ்ஸெஞ்சர் காட்டும் பட்டியலிலிருந்து உதவியைப் பெற விரும்பும் நண்பரின் பெயரைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள Invite this person லிங்கில் க்ளிக் செய்தல் வேண்டும். அப்போது உங்கள் நண்பர் உங்கள் கணினியின் டெஸ்க்டொப்பைப் பார்வையிட அனுமதிக்கும். நண்பர் உங்கள் கணினியை முழுமையாகத் தனது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவர Take control பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் ஓகே
க்ளிக் செய்து அவரை உள்ளே வர அனுமதிக்க வேண்டும்.

Sunday, January 17, 2010

பறவைகள் V வடிவத்தில் பறப்பது ஏன்?


இந்த கேள்விக்கு பறவைகள் பல அற்புதமான சுவாரஸ்யமான தத்துவங்களை நமக்கு சொல்லிவிட்டு செல்கின்றன. தொடர்ந்து படிக்க,..

நாம் பறவைகள் கூட்டமாக பறப்பதை கவனித்திருந்தால் அவை ஒரே சீராக V வடிவத்தில் பறப்பதை காணலாம். சென்னையில் காக்கை மட்டுமே காண முடியும் என்பதால் கொஞ்சம் வெளியில் வந்து செங்கல்பட்டில் சீதோஷண காலங்களில் பார்த்தால், நீண்ட தொலைவிலிருந்து வரும் கொக்கு நாரை போன்ற வெளி நாட்டுப்பறவைகள் இந்த வடிவத்தில் பறப்பதை காணலாம். ஒரு பறவை முன்னணியில் பறந்தும் பின்னால் வரும் பறவைகள் குறிப்பிட்ட இடைவெளியில் வருவதையும் பார்க்கலாம். பொதுவாக இதன் வடிவம் V என இருக்கும். அதன் காரணம் என்ன?


இந்த கேள்விக்கான பதிலானது மிக ஆழ்ந்து பார்க்கும் அறிவியலை நமக்கு தருகிறது. அதை மேலும் நாம் தெளிவாக உணர்ந்தால் ஒரு அற்புதமான மேலாண்மை தத்துவத்தை புரியவைக்கிறது.

ஒரு கேள்விக்கு இரணடு பதில்கள்.

காரணம் ஒன்று

பறவைகள் இது போல பறப்பதால் அவை அதிக அளவு ஆற்றலை சேமிக்கின்றன. இதனால் அவை வெகு தூரம் அவை தொடர்ந்து பறக்க முடிகிறது. அவை தனியாக பறப்பதினால் பயன்படுத்தப்படும் ஆற்றலைவிட இது போல் V வடிவத்தில் பறப்பதினால் அவைகளின் ஆற்றலில் 70% வரை சேமிக்கின்றன
.


கற்றது கல்வி (lessons learned)

In Science

ஆற்றலை மிச்சப்படுத்துதல் (utilization energy) - முறைப்படுத்தப்பட்ட சமச்சீர் விசையின் காரணமாக பறவைகள் தங்கள் ஆற்றலை 70% வரை மிச்சப்படுத்துகிறது. நாம் மதியம் பன்னிரெண்டு மணிக்கு நல்ல சூரிய வெளிச்சத்தில் எல்லா திரைசீலையையும் இறக்கிவிட்டு அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான விளக்குகளை எரிய வைத்துக்கொண்டிருக்கிறோம். கேட்டால் ஆற்றல் சிக்கன பல்ப் (energy efficient bulb ) என பதில் வேறு,..