clock

Monday, February 15, 2010

நல்ல இசை ஆர்வம் இருக்கா???

வாங்க மக்களே ,உங்களுக்கு நல்ல இசை ஆர்வம் இருக்கா ?...ஊர்ல இருக்கற எல்லா பாட்டையும் ஒன்னு விடாம கேப்பீங்களா ?..பொண்ணுங்க பாக்கணும்னு அர்த்தம் புரியாத ஆங்கிலப் பாட்டெல்லாம் ஹை டெசிபல்ல கதற விடுவீங்களா ?அப்போ வாங்க இது உங்களுக்கு தான் ஏன்னா ஒரு வேளை நீங்க உஷார் பண்ற பொண்ணு உங்க பக்கத்தில வந்து இது இன்னா பாட்டு ? இன்னா சொல்லிகறாங்கோ இந்த பாட்டில அப்டின்னு கேட்டா என்ன பண்ண முடியும் ?.கவலையே படாதீங்க minilyrics அப்டிங்கற இந்த மென்பொருள் மூலமா எந்தவொரு பாடலோட லிரிக்ஸ் உம் உடனே கண்டு பிடிச்சிடலாம் .இத உபயோகிப்பதின் மூலம் நீங்க எந்த ஒரு பாடல கேட்டாலும் அதோட வரிகள் ஆடோமேடிக்கா கீழே வர ஆரம்பிச்சிடும் .எல்லா தரப்பினரும் விரும்பும் ஓர் அழகான மென்பொருள் இது இசை ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் இன்றி பாட்ட வரியோட கேக்கணும் அப்டின்னு ஆசைபடற எல்லாருக்கும் இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் . பிரபல ஆடியோ பிளேயர்கள் அனைத்தும் இதை பரிந்துரை செய்திருக்கின்றன.


கீழே கிளிக்கி டவுன்லோட் பண்ணுங்க

Thursday, February 4, 2010

யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திட........

வீடியோ படங்களுக்கு யு–ட்யூப் ஓர் அருமையான தளம். நம் படங்களையும் அங்கு அப் லோட் செய்து உலகிற்குக் காட்டலாம். ஆனால் இவற்றை நாம் டவுண்லோட் செய்ய முடியாதபடி, யு ட்யூபில் இவை இடம் பெறுகின்றன.

ஆனாலும் புரோகிராமர்கள், யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திட பல புரோகிராம்களை இலவசமாகத் தந்து வருகின்றனர்.

கூகுள் தேடல் தளம் சென்று "youtube video download" என டைப் செய்தால் போதும்; இந்த புரோகிராம்கள் கிடைக்கும் தளங்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றை இன்ஸ்டால் செய்து, வீடியோ படங்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து இயக்கலாம். ஆனால் இவற்றில் பலவற்றில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கும். 60 சதவீதம் படம் மட்டுமே வரும். முழுவதும் வேண்டும் என்றால் பணம் கட்டச் சொல்வார்கள். அல்லது விளம்பரங்கள் படத்தின் குறுக்கே ஓடும்.

இவை எதுவும் இன்றி மிக எளியமுறையில், கட்டுப்பாடு எதுவும் இன்றி, யு ட்யூப் படங்களை டவுண்லோட் செய்வதற்கான குறிப்பு ஒன்றினைக் காண நேர்ந்தது. அது மிக எளிதான தாகவும், சிக்கலற்றதாகவும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த யு–ட்யூப் தளத்திலிருந்து வீடியோ படம் வேண்டுமோ அங்கு செல்லவும். இயக்கிப் பார்த்து அது தான் உங்களுக்குத் தேவையா என உறுதி செய்து கொள்ளவும். இப்போது அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி விண்டோ செல்லவும். எடுத்துக் காட்டாக அந்த முகவரி கீழ்க்கண்ட படி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.




இதில் youtube என்ற சொல்லில் ‘y’ என்பதற்குப் பதிலாக 3 என டைப் செய்து என்டர் தட்டவும். முகவரி கீழ்க்கண்டபடி மாறும்


அவ்வளவு தான்; நீங்கள் வேறு ஒரு டவுண்லோட் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இந்த வீடியோ படத்தை எந்த வகை பைல் வடிவில் வேண்டும் என ஒரு திரை கிடைக்கும். இதில் எம்பி4 அல்லது எப்.எல்.வி. என இரண்டு சாய்ஸ் இருக்கும். எது உங்களுக்குத் தேவையோ, அந்த ஆப்ஷனில் கிளிக் செய்தால் உடனே சில நிமிடத்தில் வீடியோ படம் டவுண்லோட் செய்யப்படும். பின் அந்த வீடியோவினை எப்போது வேண்டுமானாலும் இயக்கிப் பார்க்கலாம். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த தள ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் ஒரு கிளப் உள்ளது. இங்கு நீங்கள் சேர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.


Monday, February 1, 2010

மற்றவர்களின் USB Drive இல் உள்ள தரவுகளை அவர்களை அறியாமலே திருடுவதற்கான மென்பொருள்

உங்கள் இல் USB இல் உள்ள கோப்புகளையோ (Folders) அவர்களின் ஆவணங்களையோ (Documents) அல்லது உங்களுக்கு தெரியாத நபர்களின் USB Driveக்களில் உள்ள கோப்புக்களை, ஆவணங்களை அவர்கள் அறிந்து கொள்ளாமல் எவ்வாறு பிரதி (Copy) செய்து கொள்ள Copier என்னும் இந்த மென்பொருள்உதவுகின்றது.


அவர்கள் உங்கள் கணனியில் தங்கள் USB Drive களை பாவிப்பவர்களாயின் அவர்களின் சகல தரவுகள் யாவும் அவர்களை அறியாமலே பிரதி(Copy) செய்யப்பட்டுவிடும். அவர்களின் தரவுகள் பிரதி செய்யப்பட்டதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இருக்காது.

இந்த மென்பொருளானது ஆகக் கூடுதலாக 8GB அளவிலான தரவுகளையே திருடும். மன்னிக்கவும் பிரதி செய்யும். (திருடுறதிற்கும் ஒரு அளவு இருக்கு)

இந்த மென்பொருள் மூலம் பிரதி செய்யப்படும் தரவுகள் முன்னிருப்பு அடைவான (Default directory) "C:\WINDOWS\sysbackup\" என்னும் அடைவினுள் (Director) இல் சேமிக்கப்படும்.

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Download USB Hidden File Copier